Ad Widget

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்!!

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு...

கோட்டாபய கடற்படை முகாமிற்காக மீண்டும் காணியை சுவீகரிக்க நடவடிக்கை !

முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற குறித்த கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து...
Ad Widget

சீனி, அரிசி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு ஆகிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் சமயத் தலைவர்களின் உருவச் சிலைகள் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று காலை இடம்பெற்றது. ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகம் இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகியது. அதனைத்...

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதம தொற்று நோய் விசேட நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் ஊடாக கொரோனா பரலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக...

நீல உடை அணிந்த மாநகர சபை ஊழியர்கள் மீண்டும் பணியில்!!

நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே யாழ் மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்....

நல்லூர் ஆலயத்திற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை காவல்துறையினர் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலய திருவிழாவிற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தம் விதமாக சிலர் நடந்து கொள்வது குறித்து பல தரப்பினரும் தமது...

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கும், பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல...

தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்!!!

இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து நேற்றுமுன்தினமும் நேற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த...

வழமைக்கு திரும்பும் அரச சேவை! அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்!!

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக,...

உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியமும் நிராகரிப்பு

அனைத்து ரஷ்ய மக்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளன. அனைத்து ரஷ்யர்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த மாத தொடக்கத்தில் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்திருந்தார். "எல்லைகளை மூடுவதே மிக முக்கியமான தடைகளாகும். ஏனெனில் ரஷ்யர்கள் வேறொருவரின்...