- Saturday
- September 30th, 2023

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று (19) காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவைக்குட்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தை மீட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். நிலவும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவதற்காக வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதியளவு எரிபொருள் இருப்பதாக கூறும் அமைச்சர்...

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வெடிபொருட்களுடன் ஒருவர் கைது. [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது...

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் அவசர கோரிக்கையை விடுத்தனர். யாழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் இந்த அவசர...

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன குறித்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு...

இந்தியா, பெலாரஸ், மொங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் உட்பட, புரவலன் தலைமையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூட்டுப் பயிற்சியில் சீனாவின் பங்கேற்பு தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம்,...