Ad Widget

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்?

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய தினம் கருத்துக்களை பெற்றுக் கொண்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சாரக்...

இலங்கைக்கு உதவும் ஆர்வத்தில் நடிகர் கமல்ஹாசன்

தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விரும்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த 24 ஆம் திகதியன்று கமல்ஹாசன், சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்றுள்ளார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
Ad Widget

சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார், பொதுமகன் இடையில் தகராறு!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் சித்தங்கேணி எரிபொருள் நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்று எரிபொருளை பெற்றபோது இடையில் சில இளைஞர்களுக்கு எரிபொருள் நிலையத்தில் நின்ற பொலிஸாரின் உதவியுடன்...

போதைப்பொருளினால் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த இளைஞன்!!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம், திருநெல்வேலி – பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளான். இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார். எனினும் நேற்று முன்தினமும் மீளவும் ஊசி...

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை!

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளை மேலாண்மை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!!

இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கோவிட், டெங்கு தொற்று அல்லது வேறு...

டொலர் நெருக்கடி – எரிபொருள் வந்தும் இறக்க முடியாத நிலை!

கடந்த 16ம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலை விடுவிக்க தேவையான 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாத காரணத்தினால் இன்னும் இறக்கப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தாமதக் கட்டணம், துறைமுகக் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பனவற்றுக்கு...

உக்ரைனின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியது

ரஷ்யப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள சோவியத் கால நிலக்கரி எரியும் Vuhlehirsk மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய படையினர் ஒரு சிறிய தந்திரோபாய நன்மையை...