Ad Widget

எரிபொருள் விநியோகம் யாருக்கு?? – முழு விபரம் இதோ!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போக்குவரத்து, சுகாதாரம், விமான நிலையங்கள், புகையிரதம், துறைமுகங்கள், முப்படைகள் மற்றும் விவசாய போக்குவரத்து போன்ற அத்தியாவசிய...

எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Ad Widget

சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!!

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது!! பொலிஸாருக்கு எதிராக பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு!!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால்...

அமெரிக்கா; டெக்சாஸில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் லொறியில் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், லொறியிலிருந்து...

யாழில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில்...

நாட்டில் தற்போது போதியளவு மருந்து கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

வடமராட்சி கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறித்த கிராம சேவகர்களால் நடாத்தப்படும் கவனயீர்ர்ப்பு போராட்டத்தில் கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா?...

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார...

உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!!

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில்...

அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களில் 280 பேருக்கு அதிகமானவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.