ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தமையை காணொளிகள் காட்டும் அதேவேளை மீட்பு நடவடிக்கையும் தொடர்கின்றன. தொலைதூர பகுதிகளில், இருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதேவேளை...

தம்மிக்க பெரேரா எம்.பியாகப் பதவியேற்பு!!

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவி விலகல் காரணமாக ஏற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தையும் வரி...
Ad Widget

எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்...

மின் துண்டிப்பு நேரத்தில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்பு பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தட வழியில்...

சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட், நூடில்ஸ் விலைகள் அதிகரிப்பு!

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது....

இலங்கை 30 வருடங்களின் பின் சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றி சாதனை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இலங்கை, 30 வருடங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு!

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும்...

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் – பிரித்தானியா

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ரஷ்யா முழுமையாக வெளியேறும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவை தங்கள் எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக உக்ரைனுக்கு...