- Tuesday
- July 1st, 2025

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா பேரிடரை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதேநேரம், நோயாளிகள் தொடர்ந்தும் முகக்கவசம்...

கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை...

நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்டத்தில் அரிசிக்கான நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்...

எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது....

வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும் வழங்க முடியாமல், மூன்று நாட்களாக அவரது பிள்ளைகள் கடும் பசியால் நீரை மட்டும் அருந்தியுள்ளனர். அதனை பார்க்க முடியாமல் தாய் உயிரை பறிக்கும் ஆபத்தான விதைகளை உட்கொண்டுள்ளார்....

ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை – பிரித்தானிய அரசு கடும் கண்டனம்
உக்ரைனில் ரஷ்யப் படைகளால் பிடிபட்ட இரு பிரித்தானியர்கள் மற்றும் மொராக்கோ நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கு சொந்தமான செய்தி நிறுவனம் RIA Novosti தெரிவித்துள்ளது. நாட்டிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த 28 வயதான ஐடன் அஸ்லின், பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த 48 வயதான ஷான் பின்னர் மற்றும் மூன்றாவது நபரான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சவுடுன் பிராஹிம்...

ரஷ்ய - பின்லாந்து நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, தனது எல்லைகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அமைப்பது குறித்து அதன் எல்லைப் பாதுகாப்பு சட்டங்களில் திருத்தங்கள் செய்ய திட்டமிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பின்லாந்து...