Ad Widget

அரியாலையில் இளைஞன் ரயிலுடன் மோதிச் சாவு!!

அரியாலை நாவலடியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்துடனேயே விபத்து இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த ம.அரவிந்தன் (வயது- 28 ) என்பவரே உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து...

அட்டலுகம சிறுமி கொலை – பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது : 29 வயது இளைஞர் கைது

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும்...
Ad Widget

கொழும்பு பேருந்து நிலைய துப்பாக்கி சூடு!!

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் வௌியாகியுள்ளன. இன்று (30) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கிச் சூட்டுக்கு...

700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் வடக்கில் பகிர்ந்தளிப்பு!

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் வடக்கில் இன்று (திங்கட்கிழமை) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொதிகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்தார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்...

தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராட வடக்கில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானம்!

தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு வடக்கில் ஆதரவு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் மாணவ அமைப்புக்களும் தீர்மானித்துள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தொழிற்சங்கங்களும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர்...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரை பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும் ஒரு பின்னணியில்,...

ஐபிஎல் அறிமுக தொடரிலேயே வெற்றியாளர் கிண்ணத்தை சுவீகரித்த குஜராத் டைட்டன்ஸ்!

அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன. இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சம்சன்...

உக்ரைனுக்காக போராடும் பிரித்தானிய எம்.பி.யின் மகன்! குற்றவியல் வழக்கை தொடங்கும் ரஷ்யா

உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரில் களமிறங்கியதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மந்திரி ஹெலன் கிராண்டின் மகனான பென் கிராண்ட் மீது குற்றவியல் வழக்கைத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய நீதித்துறை தெரிவித்துள்ளது. கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரித்தானியாவை சேர்ந்த பென் கிராண்ட் உக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷ்ய புலனாய்வாளர்கள் தீர்மானிக்கின்றனர் என்று ரஷ்ய...

கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும் : வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுங்கள் – மஹிந்த அமரவீர

சிறுபோக விவசாயத்தில் 50 சதவீத விளைச்சலை பெற்றுக் கொள்வது கூட சாத்தியமற்றது. ஏனெனில் ஒரு மெற்றிக்தொன் உரம் கூட இதுவரையில் இறக்குமதி செய்யப்படவில்லை.எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும். வசதியில்லாதவர்கள் பூச்சாடிகளிலாவது மரகறிகளை பயிரிட வேண்டும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர...

முதலாம் திகதியிலிருந்தே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்ததும், தரையிறக்கல் பணியினை தொடர்ந்து விநியோக நடவடிக்கை நாளை மறுதினம் முதல் முன்னெடுக்கப்படும். அத்துடன்...

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டம் அறிமுகம்!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டையும் பயனற்றுப் போயுள்ளதாக விமர்சனங்கள்...

இரண்டு வாரங்களுக்கு போதுமான டீசல், பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போதுமான டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிரிபொருளினை ஏற்றிய கப்பல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மற்றும் 14 மற்றும் 16ஆம் திகதிகளில் நாட்டினை வந்தடையும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 7 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

தனியார் துறையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபை 23 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளது. உள்ளுர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தேசிய மின்வட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை செலுத்த...

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்களை அழித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சதுப்பு நிலத்தில், பல்வேறு...