Ad Widget

13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து – பாரியளவு எரிபொருள் வீண்!

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதிரியான செயல்!

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக குறிப்பாக மோட்டார் சைக்கிளிற்கான பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் பல மணித்தியாலங்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை...
Ad Widget

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்!

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று...

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சிறை!!

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வௌி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரவழைத்து, இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில்...

ஐந்து மாத குழந்தை ஷெல் தாக்குதலில் பலி!!

உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைன் நகரான கார்கிவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாத குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஷெல் தாக்குதலில் ஐந்து மாத குழந்தை உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

மதுபான விடுதி கொலை – முதன்மை சந்தேகநபர் சரண்!

பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் முதன்மை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 24 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக நேற்றையதினம் பருத்தித்துறை நீதிமன்றில் சரண்டைந்துள்ளார்....

நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – அரச மருந்தாளர்கள் சங்கம் எச்சரிக்கை

நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்று நோய் என்பவற்றுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நோய்களுக்காக வழங்கப்படும் மருந்துகளின் கையிருப்பு குறைவடைந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலை கட்டமைப்பு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜித் திலகரத்ன தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (26.05.2022) நடைபெற்ற...

உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை!!

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என அவர் கூறியுள்ளார்....

விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அபாயம்?

இலங்கைக்கான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சில விமானங்கள் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருளை நிரப்புகின்றன. எனினும் இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக எரிபொருளை பெற்றுக்...

3 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை முதலே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது. நேற்றையதினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன்...

இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது – இந்தியப் பிரதமர்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறதென்றும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தாா். இலங்கை தற்போது...

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள்...