- Sunday
- July 6th, 2025

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமான நடத்தப்பட்டது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களும் சுடர் ஏற்றி அஞ்சலித்தனர். தமிழ் மக்கள் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என ஐஓசி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டார். ஆளுநர்...

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக...

திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்....

முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு...

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு மற்றொரு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

எதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர், ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள், யார் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என கூறினார். ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில்...

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத...