Ad Widget

க.பொ.த உயர்தரப் பரீட்சாத்திகளுக்கு சிறப்பு அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டையை இதுவரை பெறாத விண்ணப்பதாரர் இருப்பின், அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சார்த்திகளில் எவரேனும் அனுமதி அட்டை கிடைக்கவில்லை...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம்(புதன்கிழமை) மேலும் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 16 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள்...
Ad Widget

ஸ்ராலினுக்கு புரிகின்றது யதார்த்தம் – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – டக்ளஸ்

இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த சில...

சைக்கிளில் பயணிக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு?? – அரசாங்கம்!

துவிச்சக்கர வண்டி (சைக்கிள்) பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சைக்கிளில் பயணிக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். காற்று மாசைக் குறைக்கவும்...

யாழில் வைத்தியர்கள் பயணித்த வாகனம்விபத்து!

யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் கடுமையான சேதங்களுக்கு உள்ளான நிலையில் , அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை – மாம்பழம் சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு குறித்த...

தயாமாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்....

வடக்கில் கோவிட்-19 தொற்றாளர்கள் அதிகரிப்பு – கொழும்பு சென்று திரும்பும் பலருக்கு தொற்று

தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவோரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பெருமளவானோர் கோவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டன. தென்னிலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும்...

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் : 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

நாடளாவிய ரீதியில் தற்போது அடையாளங்காணப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் திரிபடைந்த ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்தரப்பினர், பாடசாலை மாணவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை அண்மையகாலங்களில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு கொரோனா...

சீனாவின் அரிசி சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் – எதிர்க்கட்சி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவ சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை கூறினார். சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படுவதாகவும்...

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் இன்றுடன் முடிவடைவதாக மின்சார சபை அறிவிப்பு

மின்சார உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய் என்பன இன்றைய தினத்திற்கு (புதன்கிழமை) மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் கையிருப்பு இன்றுடன் நிறைவடைவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும்...

மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போதே இந்த விடயம்...

ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த ஆபத்து தெரியப்படுத்தப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்

சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்ற பொழுது அவரது செயல்கள் எந்த அளவு பிழை என்பதை சுட்டிக்காட்டி மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்ட மாதிரியான ஒரு நிலைமையை இந்த ஊரிலே இந்தத் துரோகச் செயலைச் செய்து வீட்டுக்குபோக முடியாத நிலையை நீங்கள் உருவாக்காமல் அவர்களது துரோகச் செயலை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது என தமிழ்த் தேசிய மக்கள்...

ரயிலுடன் மோதி மாணவன் சாவு!!

சாவகச்சேரியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையைக் கடக்க முற்பட்ட மாணவன் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இரட்டையர்களில் ஒருவர் தொடருந்துப் பாதையை கடந்த நிலையில் பின்னால் சென்ற மற்றையவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த உத்தரதேவி தொடருந்துடன் மோதியே நேற்று இரவு 6.45 மணியளவில் சாவகச்சேரி இந்துக்...

மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மோதியதில் ஒருவர் பலி!!

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார். சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச்...

கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் வீட்டு வளவுக்குள் புகுந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டதுடன் பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய்...

3 டோஸ்களையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் – சுகாதார அமைச்சு

நாட்டில் இனிவரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு – மக்களே அவதானம்

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு...

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள்...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் 14 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 877 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 2 ஆயிரத்து 763ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 324 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு...

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய வகுப்பறைகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts