Ad Widget

இலங்கையில் ஆயிரத்தை கடந்த நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 1056 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

”கிட்டுபூங்கா பிரகடனம்” வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பேரணியின் நிறைவிலேயே ”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
Ad Widget

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் – அலி சப்ரி

கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள். கிடைக்காது...

பலாலி விமான நிலையம் விரைவில் திறக்கப்படும் – அரசாங்கம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் பலாலி விமான நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு...

ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....