Ad Widget

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஐவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். பளை, கிளிநொச்சி மற்றும்...

யாழ்.பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்!

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர்...
Ad Widget

யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் (புதன்கிழமை) தன்னுடைய பிறந்ததினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்...

தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது

தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக இந்த விருது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீக்கு வழங்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்விலையே அவருக்கு இந்த விருது வழங்கி...

இன்று முதல் சிறப்பு தடுப்பூசி வாரம்

இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை சிறப்பு தடுப்பூசி வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் கூடுதலாக நான்கு கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி போடப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு 8 மணி வரை கோவிட்-19 தடுப்பூசி...

திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் – கல்வியமைச்சு

இந்த வருடத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரம், சாதாரண தரம் மற்றும் தரம் 5 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா தெரிவித்தார். உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது....

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் சஜித்தினால் வழங்கிவைப்பு!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் வே.கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விலேயே சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூபா 24 இலட்சம்...

ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பம் – மின்சக்தி அமைச்சு!

நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு இனிவரும் நட்களிலும் மின் துண்டிப்பு ஏற்படுமென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய நேரம் மற்றும் இடங்கள் தொடர்பான...

எந்நிலையிலும் நாட்டரிசி 105 ரூபாயைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படாது – அரசாங்கம்

எந்தவிதமான நிலைமையிலும் நாட்டரிசி 105 ரூபாயைவிட அதிக விலைக்கும் சம்பா அரிசி 130 ரூபாயைவிடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படாத வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மெலும் தெரிவித்துள்ள அவர், வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில், இந்தியாவிலிருந்து...