Ad Widget

ஒமிக்ரோனை தொடர்ந்து டெல்டாக்ரோன் புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்

ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் கவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் டெல்டா மற்றும் ஒமிக்ரோனின் அம்சங்களை இணைக்கும் புதிய SARS-CoV-2 இன் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சைப்ரஸில் உள்ள உயிரியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். தற்போது ஒமிக்ரோன் மற்றும் டெல்டா நோய்த்தொற்றுகள் உள்ளன, இதனிடையே இந்த இரண்டு வைரஸுகளும் கலந்து புதிய திரிபினை நாங்கள் கண்டறிந்துள்ளோம்....

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க தயார்! யாழில் சஜித்

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின்...
Ad Widget

மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவர் கைது!!

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார் என்று அவரது கணவர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார். பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ள நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை...

கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட கடுகதி சேவைக்கு புதிய தொடருந்து!!

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது. காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட...

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை

இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளது. எனவே இன்றும், நாளையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது -இலங்கை மின்சார சபை

நாட்டில் பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்க இணங்கியுள்ளதால் இம்மாதம் மின்வெட்டை அமுல்படுத்தவேண்டிய தேவையில்லை என அந்த மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 05 நாட்களுக்கு போதுமான எரிபொருள் தற்போது கிடைத்துள்ளதாக அவர்...

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பின!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கடகிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் பாடசாலைகளில் பகுதி பகுதியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் வழமை போன்று அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது....