Ad Widget

அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பு!

சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபாய் வரையிலும் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் முதித்த...

12-15 வயதுடையோருக்கு 7ஆம் திகதி முதல் தடுப்பூசி!

நாட்டில் 12 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Ad Widget

வங்கி கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணி வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறதா?

இலங்கை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் வெளியாகி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவரது உத்தியோகப்பூர்வ...

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள் மீது தாக்குதல் – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வேளை குறித்த பேருந்தினை இடைமறித்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன்,...

100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் வந்த சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுது!! பாரிய அசம்பாவிதம் தவிர்ப்பு!!

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது. சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில்...

மாடுகளுக்கு குறி சுடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயற்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,எமது அன்புக்குரிய பசுக்களுக்கு, காளைகளுக்கு...

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி!!

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச...

சீனாவில் மீண்டும் கொரோனா – மீண்டும் ஊரடங்கு!

கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருகிறது....

டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது....

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியினை விமர்சித்தால் சட்ட நடவடிக்கை?

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டார்.