Ad Widget

லண்டனிலிருந்து திரும்பிய பெண் கிளிநொச்சியில் சடலமாக கண்டெடுப்பு!

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் முதல்வருக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபை அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள்...
Ad Widget

QR Code உடனான யாழ். போதனா PCR அறிக்கை!!

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொவிட்-19 தெடர்பான PCR பரிசோதனை செய்பவர்களுக்கு, அது தொடர்பான அறிக்கை QR code உடன் வழங்கப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தார் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நல்லை ஆதினத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை நல்லை ஆதீன குருமுதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு இராணுவ...

2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு!

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது. ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க...

மற்றுமொரு கொவிட்-19 அலையினால் நாடு மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்!!

பண்டிகைக் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்கத் தவறினால், மற்றுமொரு கொவிட்-19 அலையினால் நாடு மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் அன்வர்...

பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்தியை செய்வதில் சீனா-இந்தியா இடையே போட்டி!!

பருத்தித்துறையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தின் அபிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா - சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கொழும்பு துறைமுக திட்டத்துக்கு நிகராக வடக்கு...

தான் வெட்டிய மரத்திலேயே சிக்கி உயிரை விட்ட குடும்பஸ்தர்!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிழந்துள்ளார். மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாகிய இவர் அளவெட்டி, மாசியப்பிட்டி பகுதியில் மரத்தினை வெட்டச் சென்றுள்ளார். அப்போது மரத்தை...

யாழ்.பல்கலை. மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர், செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை தடுக்கும் சாதனம்! கல்முனை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகின்றன. இதற்குத் தீர்வாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள கமு/கமு கார்மேல்...