Ad Widget

மின் விநியோகத் தடை தொடரும் – முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒவ்வொரு...

இரண்டு மாதங்களுக்கு பால்மா தட்டுப்பாடு!!

இறக்குமதி பால் மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் இல்லாததால் வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை...
Ad Widget

கோண்டாவிலில் அதிகாலையில் வீடு புகுந்த கும்பல் அட்டூழியம்!!!

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் போட்டு சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த...

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு!

நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடனால் பாதிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

நாடளாவிய ரீதியில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. தமது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சர் வழங்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ மருத்துவ இடமாறுதல்...