Ad Widget

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை அமுல்படுத்தப்படுமா? – முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என...

நான்காவது தடுப்பூசியும் வழங்க வாய்ப்பு : தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை!

எதிர்காலத்தில் நான்காவது டோஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். “தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார். எனினும் குடும்பப்பெண்...

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, இலங்கையின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய...

யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று நேற்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. இதன்போது வெடித்து சிதறிய...

இலங்கையில் சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 89 சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்தராமலி டி சில்வா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கர்ப்பிணித் தாய்மார்களின் மரணங்கள் அனைத்தும்...