Ad Widget

இன்றும் நாளையும் ஒரு மணித்தியால மின்வெட்டு!!

நாடளாவிய ரீதியில் இன்றும் (07), நாளையும் (08) தினசரி ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றும், நாளையும் மாலை 06 மணி முதல் 9.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எரிவாயு களஞ்சியசாலையை இடமாற்ற கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

நாடு முழுவதும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தமது உயிருக்கு பாதுகாப்பு தேடும் வகையில் லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி, மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை)...
Ad Widget

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கை

நேற்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒரு வார காலப் பகுதியை யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

பெண்ணை கடத்திய வாகனம் விபத்தில் – ஒருவர் பலி!

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேவேளை, குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர்...

‘ஜனவரியில் கோவிட்-19 புதிய அலை உருவாகும் அபாயம்’!!

பண்டிகைக் காலங்களில் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயத்தை கவனத்தில் கொள்ளாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் வைரஸ் வேகமாகப் பரவுவதைக் காண முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் போதும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது என அதன் செயலாளர், மருத்துவர் செனல் பெர்னாண்டோ...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் மேற்படி சப்புகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் 15 அன்று மூடப்பட்டது. தொடர்ச்சியாக 50 தினங்களுக்கு மேற்படி சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில்...

இலங்கையில் மேலும் 741 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 741 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 688 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...