Ad Widget

24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் விருத்தியடையும் சூறாவளி – மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று வட அகலாங்கு 12.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.5நு இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக்...

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் – முதல் நபர் அடையாளம்!

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே ஒமிக்ரோன் தொற்றுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட...
Ad Widget

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் திருட்டு -பொலிஸார் விசாரணை

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் தாதியின் அறை உடைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி திருமதி றதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவமனையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் திருமதி சசிகலாராணி விஜயசுகுமார் (வயது-57) என்பவரின் அறையே இவ்வாறு உடைக்கப்பட்டுப் பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று...

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடையின் நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரனின் நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது . நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும்,...

அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள் – சமையல் எரிவாயு விநியோகத்திற்கு தடை!

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேநேரம்,...

வடக்கில் சீனா இடைநிறுத்திய மின் நிலையங்களை அமைக்க இந்தியா முன்வர வேண்டும் – மனோ

வடக்கு தீவுகளில் சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள...