Ad Widget

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் நகருக்குள் கண்காணிப்பு விஜயம்!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து அதன் போது கேட்டறிந்து கொண்டார் . அதேவேளை குறித்த பகுதிகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்...

கீரிமலையில் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது

கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சி எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இன்று இடம்பெறவிருந்தன. இருப்பினும் அங்கு கூடிய காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பை அடுத்து அந்த...
Ad Widget

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என் பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் தற்சமயம் வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி நகர்கின்றமை இதற்கான காரணம் என்று அவர் கூறினார். இதேவேளை,நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும்...

வடக்கில் ஒக்டோபரில் 2,612 பேர் கோவிட்-19 நோயினால் பாதிப்பு; 71 பேர் உயிரிழப்பு!!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஒக்டோபரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக். 31) 74 பேர் கோவிட்- 19 நோயினால்...

பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இதனால் மேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம்

கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஏனைய நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வைரஸின் பிறழ்வுகளும் குறுகிய காலத்திற்குள் இலங்கையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல, இந்த...

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியபன கடிதங்கள் வழங்கி...

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும்...

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையில்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான...

பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 6,000 பேருந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன. இதேவேளை இன்று முதல் 152 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், நெடுந்தூர ரயில்கள் நவம்பர் 5 ஆம் திகதி...

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது அதேநேரம், இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 2 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன...

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்தோடு, இருவர் காயமடைந்துள்ளனர். அதன்படி, கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடளாவிய...