Ad Widget

யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்படவில்லை – நாவாந்துறை பங்குத்தந்தை

யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். புனித அந்தோணியார் சிற்றாலயம் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால்...

மாதகலில் காணி சுவீகரிப்புக்கான நடவடிக்கை மக்கள் எதிர்ப்பால் நிறுத்தம்!

மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு J/150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்று (திங்கட்கிழமை) காலை நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது. அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி...
Ad Widget

பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!!

450 கிராம் எடையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17 ரூபாயினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் நடவடிக்கை...

புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – இலங்கை மருத்துவ சங்கம்

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவர், கலாநிதி பத்மா...

யாழிலும் கிளிநொச்சியிலும் வெடித்துச் சிதறியுள்ள எரிவாயு அடுப்புக்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அம்பாறை- சாய்ந்தமருது பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவவொன்று பதிவாகி இருந்தது. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை நேற்றைய தினம்,...

யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்- ஒருவர் கைது

யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும்...

Omicron கண்டறியப்பட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை!!

புதிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை செய்யப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடந்த 14 நாட்களாக நாட்டிற்கு வரவில்லை என...

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதிக்கு கௌரவிப்பு!

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆதரவில் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு, பொன்னாடை போர்த்தி நினைவு...