. November 26, 2021 – Jaffna Journal

கிளிநொச்சியில் 6 நீர்பாசன குளங்கள் பெருக்கெடுப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு... Read more »

மீண்டும் அதிர்ச்சி..! பாடசாலை சென்ற 113 மாணவர்களுக்கு கொரோனா!

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். இன்று (26) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

எரிவாயு கசிவினால் அடுத்தடுத்து இடம்பெறும் வெடிப்புச் சம்பவங்கள் – ஆபத்திலிருந்து தப்ப மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்ணான்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும்... Read more »

குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது

யாழ்.குருநகர் வீதியில் டயர் கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என கண்காணிப்புகள் மற்றும் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, குருநகர் வீதியில் டயர்... Read more »

கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் நகர்புறங்களை விடவும் கிராமங்களில் கொரோனா பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் நகர்புறங்களிலேயே இந்த வீதம் அதிகளவில் காணப்பட்டதாகவும், எனினும் தற்போது அதில்... Read more »

கொரோனா அச்சுறுத்தல்: பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தலில்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர்... Read more »

கொவிட் பரவல் அதிகரிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு

நாட்டில் மேலும் 529 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 559,605 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27... Read more »

பட்டதாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு!

தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்றமுன்னதினம் (24)... Read more »

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான... Read more »

கிண்ணியாவில் 06 பேரின் உயிரை பறித்த படகுப் பாதை விபத்து : கிண்ணியா நகர சபை தலைவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்த படகுப் பாதை விபத்து தொடர்பில் கிண்னியா நகர சபை தலைவர் எஸ்.எச்.எம். நளீம் பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டார். கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், விசாரணைகளினிடையே... Read more »