. November 16, 2021 – Jaffna Journal

தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – உதய கம்மன்பில

அச்சத்தின் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளை பெற்றுக்கொள்வதனால் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறினார். மேலும்... Read more »

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்... Read more »

வினாத்தாள்களில் புதிய மாற்றங்கள் கொண்டுவர கல்வியமைச்சு தீர்மானம்!!

புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் சில மாற்றங்களை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கருத்தில் கொண்டு இந்த... Read more »

வாய் மூலம் உட்கொள்ளும் ‘Molnupiravir’ கொவிட் வில்லைக்கு இலங்கையில் அனுமதி!!

கொவிட்-19 தொற்று தொடர்பான மருந்தான ‘Molnupiravir’ வில்லையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். கொவிட்-19 நிபுணர்கள் குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது... Read more »

பாதையை தனியார்கள் சொந்தம் கொண்டாடுவதால் குளத்தின் ஊடாக பயணிக்கும் மக்கள்

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்கு ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய... Read more »

யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது- மாவட்டச் செயலாளர்

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” இவ்வாறு மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு... Read more »

கூட்டங்கள், திருவிழாக்கள் இரண்டு வாரங்களுக்கு தடை – புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது

நேற்று (15) நண்பகல் 12.00 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுக்கூட்டங்கள், கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு தடை விதித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் சுகாதார வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்கள்... Read more »

கொவிட் நாளாந்த தொற்று மீண்டும் 700 ஐ கடந்தது!!

நாட்டில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் நேற்றையதினம் 732 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,... Read more »

நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது – ஹேமந்த ஹேரத்

நாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த... Read more »

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

நாட்டின் சில மாகாணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதற்கமைவாக... Read more »

இலங்கையில் உச்சம் தொட்டது மரக்கறியின் விலை!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு கிலோ போஞ்சி... Read more »

கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சில நாடுகள் ஏற்கனவே முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி கூறியுள்ளார். மீண்டும்... Read more »