Ad Widget

தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – உதய கம்மன்பில

அச்சத்தின் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளை பெற்றுக்கொள்வதனால் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறினார்.

மேலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அது ஓரிரு தினங்களே நீடிக்கும் எனவும் விலைக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கும் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையானது பயன்பாட்டைப் பொறுத்தே தவிர விநியோகம் மற்றும் தேவையைப் பொறுத்தது அல்ல என்றும்அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

நிரப்பும் நிலையங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு என கொண்டுவரப்படும் தேவையான எரிபொருள் ஒரு நாளில் முடிவடைகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts