Ad Widget

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு!

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Ad Widget

யாழில் ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் உருவச் சிலை நினைவு சதுக்கத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் சீரமைப்பில் இந்த நிலை ஏன்?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் தார்ப்படுக்கை (காபெற்) வீதியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியும் சீரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் சீரமத்தை எதிர்கொண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வீதியின் சீரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து...

வடக்கு உள்ளிட்ட 3 மாகாணங்களில் கனமழை வீழ்ச்சியும் காற்றின் வேகமும் அதிகரிக்கும்!!

வடக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை 5.30 மணிதொடக்கம் அடுத்த 36 மணி நேரத்தில் 150 மில்லி மீற்றர் பலத்த மழை வீழ்ச்சியும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்தவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்...

அடுத்த 36 மணித்தியாலத்தில் இலங்கையின் வடக்கு கடற்கரை வழியாக தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்கு திசையில்இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போதுமழையோ...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ளவர்களுக்கான அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையவிருந்த காலக்கெடு நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சீரற்ற காலநிலை – 3,300 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு நேற்று (9) மதியம் ஒரு மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைதெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில்...