. November 3, 2021 – Jaffna Journal

வடமாகாண பாடசாலைகளுக்கு வெள்ளியன்று சிறப்பு விடுமுறை!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை வியாழக்கிழமை இந்துக்களின் தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் பொது விடுமுறை நாளாகும். அதனால்... Read more »

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் அறிமுகம்!!

நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதன பசளை... Read more »

கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

கிராமத்தை நோக்கிய பொலிஸ் சேவை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று( செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்... Read more »

பொது மக்கள் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் – ஆ.கேதீஸ்வரன்

வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து... Read more »

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது!!

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றுகூடல்கள்,... Read more »

யாழ். நகரில் சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் கைது!

யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி பரிசோதனை நடவடிக்கையினை... Read more »

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தாளத்திற்கு ஆடாமல் பெரு வெற்றிபெற்றோம் – பிரதமர் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்த மக்கள் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் இழைக்கப்பட்ட தவறுகளுக்கும் அரசு பொறுப்புக்கூற வேண்டியுள்ளது என்பதை பிரதமர் நினைவுபடுத்தினார். பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில்... Read more »

காங்கேசன்துறை – கல்கிசை இடையேயான ரயில் சேவை ஆசன முற்பதிவு இன்று ஆரம்பம்!!

காங்கேசன்துறை – கல்கிசை இடையிலான காலை நேர தொடருந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கும் யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்திலிருந்து 6.10 மணிக்கும் சேவையை... Read more »

இலங்கைக்கென்று தனியான கொவிட் திரிபு உருவாகக் கூடிய வாய்ப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் இலங்கைக்கென்று தனியானதொரு திரிபு உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு உள்ளிட்ட உரிய தரப்பினர் அவதானம் செலுத்தி பரிசோதனைகளை விஸ்தரிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர்... Read more »

மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை!

இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலஇடங்களில் குறிப்பாக மாலையில்... Read more »

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் உணரப்பட்டு இருக்கின்றது – ஹக்கீம்

தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப்... Read more »

இலங்கையில் இன்று மின்சாரத் தடையா? – முக்கிய அறிவிப்பு

சில தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் இன்று (புதன்கிழமை) இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்த உடன்படிக்கையை இரத்து செய்யக்கோரி இன்று முதல் இரு நாட்களுக்கு வேலைநிறுத்தப்... Read more »