Ad Widget

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியபன கடிதங்கள் வழங்கி...

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும்...
Ad Widget

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையில்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான...

பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 6,000 பேருந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளன. இதேவேளை இன்று முதல் 152 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், நெடுந்தூர ரயில்கள் நவம்பர் 5 ஆம் திகதி...

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது அதேநேரம், இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 2 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன...

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்தோடு, இருவர் காயமடைந்துள்ளனர். அதன்படி, கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடளாவிய...