Ad Widget

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

கரும்பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த நபர், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கோப்பாய் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த முதியவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கோப்பாய் பூதர்மடத்தடியைச் சேர்ந்த கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது 58) என்பவரே படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று மாலை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த...
Ad Widget

தேசிய அடையாள அட்டை விநியோகத்தின் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்று காரணமாக இவ்வாறு ஒரு நாள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக யாழ் போதனா வைத்தியசாலையில் நினைவுத்தூபி அமைக்க நடவடிக்கை!

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்திய ராணுவத்தினரால்...

நாட்டினுள் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை!! – எரிசக்தி அமைச்சர் விளக்கம்!

நாட்டினுள் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து விளக்கம் அளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், “ஒரே விடயத்தை 108 தடவை சொன்னால் அது உண்மையாகிவிடும்...

16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய, வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.