. October 7, 2021 – Jaffna Journal

நாட்டில் முதன் முறையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!

நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய... Read more »

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »

சமையல் எரிவாயு விலையை மீள அதிகரிக்க வேண்டிவரும்!!

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் எரிவாயு விலை வேகமாக அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

3 முதல் 12 வயதுடையவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கலாமா? – ஆராய்கிறது சுகாதார அமைச்சு

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அலகு வழங்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், மருத்துவ வல்லுநர் ஷியாமன் ராஜீந்திரன் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்... Read more »

சந்தேக நபர்கள் தப்பிக்க சுன்னாகம் பொலிஸார் உதவி; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ஏழாலை பிரதேசத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் வேண்டும்மென்றெ தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். சுன்னாகம்... Read more »

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரத்து 778ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 78... Read more »

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா். புதுவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக இலங்கையில்... Read more »