Ad Widget

யாழ். இராசாவின் தோட்ட வீதி மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் இராசாவின் வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில் , இராசாவின் வீதியின் குறுக்காக வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , குறித்த...

21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!!

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5...
Ad Widget

நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நாவற்குழி நகரத்தின் அபிவிருத்தி பணிகள், உத்தியோகபூர்வமாக திட்டத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவுக்கமைய இன்று...

நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது!!

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்ததன்மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணியளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 36...

இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் –யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

தற்போதுள்ள இயல்புநிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாண மாவட்டமானது பொது முடக்கத்தின் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது தற்போது...

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார். இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர்...