. October 1, 2021 – Jaffna Journal

விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓடியவருக்கு 125,500 ரூபாய் தண்டம்!

மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர் இன்று நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டார். அவர் மீது 7... Read more »

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம் பெற்றது. இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்... Read more »

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர்... Read more »

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டார். அதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ஆம் திகதிவரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் திகதியிலிருந்து 12 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்று... Read more »

காணாமற்போன கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!!

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த... Read more »

அடுத்த 2 வாரங்களில் கோவிட்-19 வைரஸ் பரவல் அடிப்படையில் கட்டுப்பாடுகள் இறுக்கப்படலாம்

அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள... Read more »

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறினால் நிலைமை மேலும் மோசமாகும் – ஆ. கேதீஸ்வரன்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும்,... Read more »

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு!!

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான தங்களது சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது. எனினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என கூறப்படுகின்றது. Read more »

உற்சவங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை- இரவு நேர ஊரடங்கு அமுல் : விசேட அறிவிப்பு வெளியானது!

நாடு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று முதல் 15ஆம் திகதி வரை பதிவுத்... Read more »