Ad Widget

மாற்றுத்திறனாளியின் தோட்டம் விசமிகளால் நாசம் : சட்ட நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாநகர முதல்வர் உறுதி

பளை பிரதேசத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருடைய, மிளகாய் செடிகளை மர்ம நபர்கள் பிடுங்கி எறிந்த நிலையில், இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு ஒரு தொகை நிதியையும் வழங்கினார். அதேவேளை அவர்களுக்கு சட்ட உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு உரிய உதவிகளும் வழங்க...

விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை இராணுவம் மீள கையகப்படுத்தும் நடவடிக்கை : நேரில் சென்று பார்வையிட்டார் சுமந்திரன்

கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று ஆராய்ந்தார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச. சுகிர்தன் ஆகியோருடன்...
Ad Widget

ஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை !!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படும்...

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக போக்குவரத்து, கமநலம்,...