Ad Widget

ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு?

இறக்குமதி பால் மாவின் விலையை ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபாவால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் வாழ்க்கைச் செலவுக் குழுவால் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். கூட்டுறவு...

டெல்டா கட்டுப்பாட்டுக்குள் : மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளது : சுகாதாரப் பணியகம்

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் வெற்றி மற்றும் நீண்டகால தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் சாதகமான பெறுபேறுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதாகவும், டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார். வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்ற நேரங்களில் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின் கொவிட் வைரஸ் பரவல்...
Ad Widget

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் சுத்தியலினால் அடித்துக்கொலை?

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில்,...

வடக்கு மாகாணத்தில் 20- 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார...

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வருக்கு விளக்கமறியல்!

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர் இதன்போது, சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த...