. September 13, 2021 – Jaffna Journal

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு லட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியும் பெறவில்லை!

வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 547,150 பேருக்கு 1வது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இது வடமாகாணத்தில் உள்ள... Read more »

எரிபொருள், மருந்துகளுக்கு எந்தநேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்பது தெரியாது :பந்துல

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது. மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எந்த நேரத்தில்... Read more »

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார்.... Read more »

புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை – எம்.எ.சுமந்திரன்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமனம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி, கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும்... Read more »

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அடுத்த மாதம் திறப்பு?

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 200 க்கும் குறைவான... Read more »

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்!!

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது மருத்து... Read more »

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க தீர்மானம்

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு, கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச... Read more »