Ad Widget

காரைநகரில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 34 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் யார் என்று, காரைநகர் சுகாதாரத் தரப்பினரைத் தொடர்புகொண்டு...

தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடுவதால் மாணவர்களுக்கு நீண்டகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்!!

ஊரடங்கு உத்தரவை நீக்கியவுடன் பாடசாலைகளை விரைவில் திறப்பது அவசியமானது என கொழும்பு மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவப் பேராசிரியர், மருத்துவ வல்லுநர் பூஜித விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்....
Ad Widget

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் பெண் கோவிட்-19 நோயினால் மரணம்!!!

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். “கடந்த 4ஆம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை...

செப்டம்பர் 21 க்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமா? – அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என இராணுவத் தளபதி...

யாழ்ப்பாணத்தில் 1 வயது குழந்தை உயிரிழப்பு: கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தெல்லிப்பழை பொியபுலம் பகுதியை சேர்ந்த 1 வயதான குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.