Ad Widget

இடம்பெயர்ந்து மீளக்குடியமராதோர் பதிவு செய்ய வேண்டுகோள்!

யாழ். மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம்,...

கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. 103 ஆண்களும் 109 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆணொருவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகத்...
Ad Widget

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அங்கு...

யாழில் இளம் பெண் உள்ளிட்ட இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண் (22 வயது) உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால் குறித்த பெண்ணை, மந்திகை...

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக 2003ஆம் ஆண்டு...

18ஆம் திகதி வரை ஊரடங்கை நீடித்தால் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் – WHO

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் பேரை பாதுகாக்க முடியும் எனவும்...

யாழ்.பல்கலையில் நால்வருக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள்...