Ad Widget

இன்றிரவு முதல் ஓகஸ்ட் 30 அதிகாலை வரை நாடுமுடக்கம்!!

நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்குவது குறித்த மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பு!!

ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய செவி சாய்த்துள்ளார். கொவிட்-19 தடுப்பூ பணிக்குழுவின் கூட்டதிற்கு பின்னர், அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டை முடக்குவது தொடர்பான...
Ad Widget

புதிய அரசியலமைப்பு- கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை!

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர்...

நாடு முடக்கப்பட்டால் எம்பிக்கள், அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு?

நாடுமுழுவதும் ஊரடங்கு விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதமும், சுகாதாரத் துறை தவிர்ந்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் மற்றும் சிற்றூழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் நன்கொடையாக வழங்கவேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதிய...

அரை றாத்தல் பாணும் பருப்பும் 150 ரூபாய்; பிளேன் ரீ 25 ரூபாய்!! உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிப்பு!!

திங்கட்கிழமை முதல் வெதுப்பக உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதால் உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து வெதுப்பக உற்பத்திகளின் விலையை உயர்த்துவது நியாயமானது. பாண் மற்றும் பிற வெதுப்பக...

வர்த்தக நிலையங்களை மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது- இராணுவத் தளபதி

வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலைமை உணர்ந்து வர்த்தகர்கள், தங்களது வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் பலி!!

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும் கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண்...

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்!! மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர்,...