Ad Widget

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உள்பட நாட்டில் பல இடங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அடையாளம்!!

94 கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரியல் மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனைகளில், 56 பேருக்கு கோரோனா வைரஸின் டெல்டா திரிபு தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொழும்பு, அங்கொட, கடுவெல, நுகேகொட, கல்கிசை, பொரலஸ்கமுவ, மஹரகம, பிலியந்தல, கஹதுடுவ,...
Ad Widget

தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல்!!

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்திநிதியான் ஆச்சிரம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயம் வருடாந்திர பெருந்திருவிழா இன்று ஆரம்பமானது. சுகாதாரக்...

அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பாக புதிய சுற்றுநிருபம்!!

அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பாக புதிய சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அரச நிறுவனங்களின் பிரதானிகளினது...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழப்பு!! நாட்டில் 94 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த (67 வயது) ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த (71 வயது) பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றினால்...

இலங்கையில் மீண்டும் முடக்கம்? – முக்கிய தீர்மானம் இன்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், தினசரி இறப்புகள் உச்சத்தை எட்டியுள்ளதால், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக...

கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது!!

கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். நாட்டில் டெல்டா கொவிட் திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிறது என்பது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். அதன்படி,...