Ad Widget

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது தங்கையின் இறப்பிற்கு நீதி வேண்டும்,...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 115 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
Ad Widget

வல்வெட்டித்துறையில் மற்றொரு கிராமத்திலும் தொற்றாளார்கள் அடையாளம்!!

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராரத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடி மற்றும் தீருவில் ஆகிய...

18 லிற்றர் எரிவாயு சிலிண்டருக்கான விலை நிர்ணயம்

எரிவாயு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய 18 லிற்றர் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்த இத் திட்டத்திற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய எரிவாயு சிலிண்டர் 1,395 ரூபா விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 12.5 கிலோ உள்நாட்டு...

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் – சட்டத்தரணி சுகாஸ்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையைப் பொறுத்த வரை பயங்கர வாதத் தடைச் சட்டம்...

சினோபோர்ம் தடுப்பூசி கொரோனாக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் – உள்நாட்டு ஆய்வில் தகவல்

இலங்கையில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளமை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். 20 முதல் 39 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (98.9%) ஆகவும் 60 வயதுடையவர்களுக்கு செரோகான்வெர்ஷன் விகிதங்கள் (93.3%) குறைவாக இருந்தன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....