Ad Widget

பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்...

நிலவுக்கு செல்லும் அணியில் இலங்கை யுவதி!!

Dear moon என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என்னும் யுவதியும் இடம்பெற்றுள்ளார். இந்த திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த சிறப்பு...
Ad Widget

ஆரியகுளத்தை அழகாக்கி புனரமைத்தல் செயற்றிட்டம் ஆரம்பமாகவுள்ளது!!

யாழ்.நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியின் பேறாக தனியார் ஒருவரின் நிதி அனுசரணையில் குறித்த குளமும் அதன் அயல் பகுதிகளும் புனரமைத்து அழகுபடுத்தப்படவுள்ளது. ஆரியகுளத்தினை இரு கட்டமாக அழகுபடுத்தப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளான வடிவமைப்பு...

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி – அரசாங்கம்

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில், நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19 தடுப்பூசியை வழங்கினோம். இதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது...

அடுத்த சில நாள்களில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக டெல்டா திரிபு மாறும் – பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

கோவிட்-19 வைரஸ் டெல்டா திரிபு அடுத்த சில நாள்களில் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் ஊடகத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்ததாவது; அரசும் பொதுமக்களும் நிலமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறினால் நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும். உலகெங்கிலும் உள்ள போக்கைக் கண்டுகொள்ளலாம். இலங்கை...

யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (63 வயது) பெண் ஒருவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.