Ad Widget

வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தினாரல் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம்(புதன்கழமை) மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின், இல்லத்திற்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கான நீதி வேண்டி இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மட்டக்களப்பு காந்திப்...

பரிசோதனை வெற்றி – கொரோனாவுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....
Ad Widget

இலங்கை – சீனா இராஜதந்திர உறவுகளின் 65 ஆண்டுகள் பூர்த்தி நினைவு நாணயம் வெளியீடு!!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு,மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய்கள் நாணயத்தினை,இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் அவர்கள், நேற்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் வழங்கி வைத்தார். இந்த...

வயதுக் கட்டுப்பாடின்றி சகல ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் திங்களன்று ஆரம்பம்!

நாட்டில் முன்னுரிமை தொழில் படையாக பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து...

வடக்கில் 3 மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு நேரடியாகக் கிடைக்கப் பெற்ற தடுப்பூசி டோஸ்களே மக்களுக்கு வழங்கப்படுகின்றன

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வட மாகாணத்தில் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக, நான் குறிப்பிட்டதாக...

இருமாதகாலத்தின் பின்னர் டெல்டா வைரசின் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 - 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுகொலை செய்யப்பட்ட மகனுக்கு நீதி வேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், (34 வயது) மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார். மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....