Ad Widget

பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காகவே அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோளிட்டு சிங்கள ஊடகம் ஒன்று சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!

கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி...
Ad Widget

மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு!! நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரியாலை கிழக்கு பகுதியில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2...

செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் – ஜனாதிபதி

நாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். உலகளவில் பரவியுள்ள கொரோனா நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன என்றும் மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு...

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இந்த பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என...

வவுனியாவில் மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று (திங்கட்கிழமை) இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று...

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!!

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறுமி ஒருவரை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார். விசாரணைக்கு...

அனுமதி கிடைத்தால் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி

அடுத்த சில வாரங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்ததாவது; கோவிட்-19...

சாரதிகளுக்கு 22 புள்ளிகள் வழங்கப்படும் – குற்றங்களினால் பூஜ்ஜிய புள்ளிக்கு வந்தால் சாரதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார். வாகன சாரதிகள்...