. June 28, 2021 – Jaffna Journal

யாழில் கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- வேலணை பகுதியினைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் . சுன்னாகத்திலுள்ள ஆலயமொன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது,... Read more »

துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்

துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள்... Read more »

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை!!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தினர். ஆகவே தமது தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆனந்த சுதாகரின் மகன்... Read more »

வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்!!

வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும்... Read more »

யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம்!!

யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (27) யாப்பாணம் கலாச்சார மண்டபத்திற்கு வருகை தந்து பேச்சு நடத்தினார். இதில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து... Read more »

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலை அதிகரிக்கப்படுமா?

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல், கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை... Read more »

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா தொற்று!!

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் மாதிரிகளை வழங்கியுள்ளார். அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more »

டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயம் – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!!

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும்... Read more »