. June 23, 2021 – Jaffna Journal

சுமந்திரன் – சுரேன் ராகவனுக்கு இடையில் கருத்து மோதல்!

அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது. அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.... Read more »

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்க 0775 687... Read more »

முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த விடயத்தில் அரசியல்... Read more »

யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம்(புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில்... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி,... Read more »

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதே கைதிகள் விடுதலைக்கு ஒரே வழி!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் இலாபங்களுக்கு பாவிக்காதீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள்... Read more »

இன்று இரவு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும் மீண்டும் இன்று புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.... Read more »

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு... Read more »

யாழில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா... Read more »

நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு! 2,000இற்கு மேற்பட்டோருக்குக் தொற்று!!

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 33 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு... Read more »