Ad Widget

பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது!

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21) பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக் கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா...

யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!!

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது. குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்குவருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக...
Ad Widget

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்!!

மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 53 வயதான பெண் தற்போது தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்டா மாறுபாடு மாதிவெலவில் பரவி வருவதாக சந்தேகம் எழுந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையிலேயே மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாறுபாடு முதன்முதலில் தெமடகொட...

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் !

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுபோன்று, திருத்தப்பட்ட விண்ணப்பங்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தரவுகளை கிராம உத்தியோகத்தர் மூலம் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை – அமைச்சர் டக்ளஸ்

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார். எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக...

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவியிருக்கலாம் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வெளியில் நடமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நபரிடமிருந்து...

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளது!!

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது,“ கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக...

நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியமல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதி நிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்காத அரச நிறுவனங்களின் பணியாளர்கள் அதிகபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடுநேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த்...