Ad Widget

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின்...

மணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார். நாகேந்திரபுரம் பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக சென்ற டிப்பர் ஒன்றை நிறுத்துமாறு, படையினர் சமிஞ்கை...
Ad Widget

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார். சுகாதார வழிகாட்டுதல்கள்...

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தது. இதனை அடுத்து விலையை அதிகரிப்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!!

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அலுவலக நேரங்களில் 0707 677877 என்ற இலக்கத்தின் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொண்டு நியமனங்கள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். வாட்ஸ்அப், வைபர் அல்லது எஸ்.எம்.எஸ். செய்திகள் மூலமாகவும்...

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு! புதிதாக 2028 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 27 ஆண்களும் 20 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....