Ad Widget

7ஆம் திகதிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை!!

வரும் ஜூன் 7ஆம் திகதிக்குப் பின்னரும் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மருத்துவர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் தினசரி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி,...

நல்லூர் – அரசடியிலிருந்து வெளியேறிய ஐவரை விளக்கமறியலில் வைத்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம்!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4...
Ad Widget

யாழ். பல்கலை. ஆளணிக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச சிறப்பு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழக ஆளணியருக்கு சினோபாம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு...

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்றும் இடம்பெற்று...

அடுத்த கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முதல் கட்ட தடுப்பூசியை விரைவுப்படுத்த வேண்டும்- அங்கஜன்

யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முதல் கட்ட தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தினால்தான் அடுத்த கட்ட தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை...