Ad Widget

கிராம அலுவலகரும் மனைவியும் யானை தாக்கியே உயிரிழப்பு – இறப்பு விசாரணையில் தெரிவிப்பு

பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது துணைவியும் யானை தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர் என்று இறப்பு விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது-52) மற்றும் அவரது மனைவி...

யாழ் இராணுவ கட்டளைத் தளபதி யாழ் மக்களிடம் வேண்டுகோள்!

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற...
Ad Widget

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவிபிரமாணம்

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார். பதவிப்பிரமாணத்தின் போது ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தார்.

இறுதி சடங்கில் பங்கேற்ற பூசகர் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார். அவருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதன் பெறுபேறுகள் நேற்று மாலை கிடைக்கப்பெற்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் வங்கியாளரின் தந்தை...

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்தும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...

சீரற்ற காலநிலையால் யாழில் 46 குடும்பங்கள் பாதிப்பு – குழந்தை காயம்

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது...

யாழில் ட்ரோன் கண்காணிப்பின் அடிப்படையில் 10 பேர் கைது!

யாழ். நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தலில் விதிமுறைகளை மீறிய பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார் இன்று காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை...

திடீர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார். சிறுவனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது....