Ad Widget

யாழ்.மாநகர காவல் படை சீருடை அணிந்த ஐவரும் நாலாம் மாடிக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு 5 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த மாதம் 23 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டங்களின்...
Ad Widget

கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி வழிபாடு – யாழ். ஆயர் இல்லம் அழைப்பு

தற்போது பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கோரோனா வைரஸ் தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும், துறவற இல்லங்களிலும், இறைமக்களின் இல்லங்களிலும் நாளை மே 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி...

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, குறித்த பாடசாலையை இராணுவத்தின் உதவியுடன் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சிகிச்சை...

யாழில் பொதுமான வைத்திய வசதிகள் இல்லை!! மக்களை எச்சரிக்கும் மாவட்ட அரசாங்க அதிபர்!!

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், “யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்கள் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த ஏற்பாடு

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்திற்கு அமைய...

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு!!

தமிழக சட்ட சபை தேர்தலில் 125 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற திமுக தனிப்பெரும்பானமையுடன் இன்று(07) ஆட்சி அமைக்கிறது. சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா...

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில நிறுவனங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளை நடாத்துவதை...

நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை!!

இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும், தெரிவிக்கையில் கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து...

யாழில் நேற்றையதினம் 20 பேருக்கு கொரோனோ!! – இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 807 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில்...

யாழ்.போதனா வைத்திய சாலையின் கவலையீனம் – 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரணச்சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கவலையீனமான செயற்பாட்டினால் தாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சிறாம்பியடியை...

கிளிநொச்சியில் மற்றுமொரு கொரோனா சிகிச்சை நிலையம்!

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு (வியாழக்கிழமை) முதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளைக் கொண்டதாகவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த சிகிச்சை நிலையமானது, கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பின்...

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 745ஆக அதிகரித்துள்ளது. இதே வேளை நாட்டில் நேற்று மட்டும் 1895 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு...