Ad Widget

வடக்கில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா...

சுகாதார விதிமுறைகளை மீறி திருவிழா செய்ததாக உபயகாரர் உள்ளிட்ட நால்வர் சுயதனிமைப்படுத்தலில்

கோரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபாயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது. காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர்...
Ad Widget

யாழில் புத்தர் சிலை உடைத்த இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புத்தர் சிலையை உடைத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமலை நல்லிணக்க புரம் பகுதிக்கு அண்மையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட...

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

விடுதலைப்புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று இரவு மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் 3 மாதகால பொலிஸ் தடுப்பு...

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறு அனுமதி...

கொரோனா அச்சுறுத்தல் – ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு!

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியது!

நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 705ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 764 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில்,...